கமலை விட்டு விலகிய நாசரின் மனைவி... ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம்
திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சென்று நாசர் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் தீயாய் பரவிவருகின்றது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், திமுக கூட்டணி கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு சினிமா பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர்கள் ஜெயராம், சூரி, அபிராமி ராம நாராயணன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் சங்கத் தலைவர் நடிகர் நாசர் அவரது மனைவி கமீலா நாசருடன் மு.க ஸ்டாலின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். கமீலா நாசர் சமீபத்தில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


