அமெரிக்காவுக்கே சவால் விட்ட குட்டி நாடு- எரிமலை மின்சாரம் மூலம் பிட்காயின் உற்பத்தி!
அமெரிக்கப் பகுதியில் இருக்கும் குட்டி நாடான எல் சால்வடோர் அரசு ஆனது பல அரசு அமைப்புகளின் தடையை மீறி உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பிட்காயினை அமெரிக்காவை போல் அதிகாரப்பூர்வமாக நாணயத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், எல் சால்வடோர் நாட்டின் இப்புதிய அறிவிப்பால் உயர்ந்த பிட்காயின் விலை சில மணிநேரத்திற்குப் பின்பு சரியத் துவங்கியுள்ளது. எல் சால்வடோர் நாட்டின் அதிபரான Nayib Bukele பிட்காயின் உற்பத்தியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்கவும் முடிவு செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பிட்காயின் தயாரிப்பில் நிலக்கரி போன்ற பாசில் எரிபொருள் அதிகமாகப் பயன்படுத்தும் காரணத்தால் மின்சாரத் தட்டுப்பாடு மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் சூற்று சூழ்நிலைப் பாதிக்கப்படுவதாக எலான் மஸ்க் உட்படப் பல முன்னணி டெக் வல்லுனர்கள் மற்றும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் Nayib Bukele பிட்காயின் உற்பத்திக்கு எரிமலை மூலம் மின்சாரம் தயாரித்து அதன் மூலம் பிட்காயின் கிரிப்டோகரன்சியை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளார் இதுகுறித்து பேசிய நாட்டின் தலைவர் நயீப், எரிமலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நாங்கள் தற்போது டெஸ்டிங் செய்து வருகிறோம்.
முதல் கட்ட உற்பத்திக்காகப் பிட்காயின் உற்பத்தி தளத்தையும் அமைத்து வருகிறோம். மேலும் தற்போது வரையில் இத்தளத்தின் மூலம் 0.0059 பிட்காயின் உற்பத்தி செய்துள்ளோம். இதன் மதிப்பு 260 டாலர் என்றும் நயீப் கூறியுள்ளார். இதன் மதிப்பு சரிவு எல்லாம் எப்படி என இனி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.....