தூங்குற வேலைக்காரங்களை நயன்தாரா எழுப்ப மாட்டாங்க... - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!
தூங்குற வேலைக்காரங்க எழுப்ப மாட்டாங்க என்று நயன்தாராவை குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். இவர் கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜீத்தை வைத்து AK67 படம் இயக்க இருந்தார். ஆனால், இப்படத்திலிருந்து அவர் திடீரென்று விலகினார்.
நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் ஓபன் டாக்
இந்நிலையில், ஒரு சேனலுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், சின்ன வயதிலிருந்தேன எனக்கு டைரக்டர் ஆகணும் என்று தான் ஆசை. அதை நோக்கி படித்தேன். அதை நோக்கியே வந்தேன். நான் சினிமாவில் நுழைந்த காலத்தில் எனக்கு யாரும் தெரியாது. என் பெற்றோர்கள் போலீஸ் டிபார்ட்மெண்ட். நண்பர்கள் மூலம் அப்படியே பேசி, பேசி தான் ஏதோ செய்து உள்ளே வந்துட்டேன். நயன்தாராவைப் பற்றி சொல்லணும்ன்னா... இரவு நேரத்தில் நாங்கள் சாப்பிடுவோம். சில நேரங்களில் 1 மணிக்குக்கூட தாமதமாக சாப்பிடுவோம்.
நான் சாப்பிட்ட பிறகு நாங்க சாப்பிட்ட பாத்திரத்தை நயன்தாரா கழுவி, அதை எடுத்து வைத்துவிட்டுதான் அவங்க தூங்கவே செல்வார்கள். இது ஒரு சின்ன விஷயம். எங்க வீட்டில் 10 பேர் இருக்கிறார்கள் வேலை செய்வதற்கு. அந்த 10 பேரில் யாரையாவது ஒருத்தரை எழுப்பி, கழுவ சொன்னாலும் அவர்கள் வந்து கழுவி வைத்து விடுவார்கள்.
ஆனால், நயன்தாரா தூங்குற வேலைக்காரர்களை எழுப்ப மாட்டாங்க. நாங்க சாப்பிட்ட பாத்திரத்தை அவங்களே கழுவி வைத்து விட்டுதான் தூங்க வருவாங்க.
அப்போ நான் கேட்பேன்.. ஏன் இப்படி இந்த நேரத்தில் பாத்திரத்தை கழுவுற என்று. அதற்கு அவங்க சொல்வாங்க. அழுக்கு பாத்திரத்தை அப்படியே வைத்தால் வீட்டுக்கு நல்லது இல்ல.
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை இயல்பாகவே அவங்க பார்த்து பார்த்து செய்வாங்க. அவங்க ரொம்ப நல்ல பெண். எங்களுடைய உறவுமுறை ரொம்ப ஈஸியா இருக்கிறது என்றார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.