நடுரோட்டில் அட்டகாசமான ரொமான்ஸ்... நயன்தாரா விக்னேஷ் சிவனின் வைரல் புகைப்படம்
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் நடுரோட்டில் எடுத்த ரொமான்ஸ் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா விக்னேஷ்
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடி என்றால் விக்கி மற்றும் நயன் தம்பதிகள் தான்.
இரண்டு குழந்தைக்கு பின்பும் தனது காதலில் குறைவு இல்லாமல் வலம் வருகின்றனர். இவர்களின் குழந்தைகளான உயிர் மற்றும் உலகு இருவரின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினர்.
மலேசியாவில் கொண்டாடி வரும் நிலையில் தற்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஆம் நடுரோட்டில் மிகவும் சிம்பிளான ஆடையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ரொமான்ஸாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் குறித்த ஜோடிகள் வெளியிட்டுள்ள நிலையில், வைரலாகி வருகின்றது.
மேலும் புகைப்படங்களை பதிவிட்டு தான் எழுதிய நான் பிழை பாடலில் இடம்பெற்ற ‘அவளோடிருக்கும் ஒருவித சினேகிதன் ஆனேன்' என்கிற வரிகளை கேப்ஷனாக கொடுத்துள்ளார் விக்கி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |