ஸ்ரீதேவி மரணத்திற்கு பின்னால் இப்படியொரு விடயம் உள்ளதா? மருத்துவர் விளக்கம்!
நடிகை ஸ்ரீதேவி தன்னுடைய உணவில் சில கட்டுபாடுகள் வைத்திருந்த காரணத்தினால் இறந்தார் என்பதனை மருத்துவர் ஒருவர் விளக்கமாக கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
இவர் தமிழில் ரஜினி, கமல் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலத்தின் உச்சத்தின் இருந்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்பட பக்கமும் மிகவும் பிரபலமானாவர்.
நடிகை ஸ்ரீதேவி பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
இறப்பிற்கான காரணம்
ஸ்ரீதேவி பிப்ரவரி 24, 2018 அன்று துபாயில் உள்ள ஜுமேரா எமிரேட்ஸ் டவரில் வைத்து மரணமடைந்திருந்தார்.
முன்னதாக அவரது மரணம் மாரடைப்பு வழக்கு என்று அழைக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாமல் மர்மமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு அவரின் கட்டுபாடான உணவு பழக்கங்கள் தான் காரணம் என போனி கபூர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரபல மருத்துவர்கள் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் மருத்துவ விளக்கம்
இதன்படி, “ டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பது அவ்வளவு நல்லத்தல்ல. உடலுக்கு கண்டிப்பாக புரதம், காபோவைதரேற்று, கொழுப்பு இவை மூன்றும் அவசியமாகும்.
இதில் ஏதாவது குறைத்து சாப்பிடும் போது உடலுக்கு இயக்கத்திற்கு தேவையான கலோரிகள் குறைக்கின்றது. அத்துடன் சிலர் நடிகைகள் கொழுப்பு மற்றும் காபோவைதரேற்று உணவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.
இதனால் உடலுக்கு தேவையான சக்தி இல்லாமல் போகின்றது. மேலும் தசைகளின் வளர்ச்சிக்கு புரதம் அவசியம். அதற்காக சிலர் டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பார்கள். இதனை உடலுள்ள மெட்டபாலிசம் தான் குறைக்கின்றது.
டயட் என்றால் என்ன?
அவ்வாறு சாப்பிடாமல் இரண்டு வேளைகள் மாத்திரம் தான் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் மூன்று வேளைக்கான சாப்பாட்டை இரண்டு வேளையில் சாப்பிட வேண்டும்.
தொடர்ந்து நாம் 16 மணித்தியாலங்கள் சாப்பிடாமல் இருக்கும் போது அதிகப்படியான எடை குறைப்பு ஏற்படும். இதன் காரணமாக தான் சிலர் இளம் வயதிலேயே வயதானவர்கள் போல் தோற்றமளிப்பார்கள்.
இவர்களின் தோல்களில் கூட ஒரு வகை சுருக்கம் இருக்கும். இவற்றை தவிர்த்து நமக்கான ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தொடர வேண்டும்...” என கூறியுள்ளார்.
இந்த செய்தி ஸ்ரீதேவி போல் இருக்கும் நடிகைகள் மற்றும் மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் உதாரணமாக இருக்கும்.
மேலும் டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் காலத்தை கடத்துபவர்கள் இது போன்ற மருத்துவ தகவல்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |