விக்னேஷ் சிவனுக்காக ரிஸ்க் எடுத்த நயன்தாரா- வெளியான தகவல்
விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா ரிஸ்க் எடுத்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பறிபோன வாய்ப்பு
சமீபத்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் விக்னேஷ் சிவன். ஏகே 62 கை நழுவிப் போனதையடுத்து, எப்படியாவது ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
கணவருக்காக ரிஸ்க் எடுத்த நயன்தாரா
இதனையடுத்து இளசுகளுக்கு பிடித்தவகையில் விக்னேஷ் சிவன் தற்போது கதையை மாற்றியுள்ளாராம். தற்போது விக்னேஷ் சிவனுக்கு ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தக் கதையை விக்னேஷ் சிவன் கமலிடம் சொல்ல, அவர் ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அடுத்தகட்ட பணிகளை துவங்க விக்னேஷ் சிவன் ரெடியாகியுள்ளார். ‘லவ் டுடே’ படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனை தன் படத்தில் ஹீரோவாக நடிக்க புக் செய்திருப்பதாகவும், அதில் நானே நடிக்கிறேன் என்று விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா கூறியுள்ளாராம்.
தற்போது நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இச்சமயத்தில் வித்தியாசமான ரோலில் நயன்தாரா நடித்தால் அவரது மார்க்கெட் பாதிக்குமா என்ற கலக்கத்தில் விக்னேஷ் சிவன் இருக்கிறாராம்.
இருந்தாலும், விக்னேஷ் சிவன் மீது முழு நம்பிக்கை வைத்த நயன்தாரா, இப்படத்தில் நான் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளாராம். விக்னேஷ் சிவனுக்கு தற்போது ஒரு வெற்றி தேவை என்பதற்காக நயன்தாரா ரிஸ்க் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.