குழந்தைகளால் நயன் விக்கி ஜோடிக்கு ஏற்படும் அதிர்ஷ்டம்! பிரபல ஜோதிடர் உடைத்த உண்மை
பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா கணிப்பின் படி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு, இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.
நயன்தாரா விக்கி ஜோடிகள்
பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த 4 மாதத்தில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக புகைப்படத்தினை வெளியிட்டு, புகைப்படத்துடன் உயிர் மற்றும் உலகம் என்று கூறியிருந்தார்.
இந்த பிரச்சினை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது சட்டத்தை மீறி இவர்கள் செய்துள்ளதாகவும் கருதப்படுகின்றது.

ஜோதிடர் கூறிய உண்மை
இந்த நிலையில், பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், குழந்தைகளின் பெயர்களின் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது, உயிர் மற்றும் உலகம் தங்கள் பெற்றோரின் (நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்) வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்றார்.
இதில் உயிர் என்றால், தன்னுடைய வசீகரத்தால் எளிதில் உலகை தன் வசப்படுத்தக் கூடியவர் என்று அர்த்தமாம். மேலும், இனிமையான மற்றும் ஆடம்பரமான முறையில் வாழ்பவர் என்றும் கூறியுள்ளார்.
அதே போல், உலகம் என்றால் சுசுறுசுறுப்பு, ஆற்றல் மிக்கவர், தைரியமானவர் மற்றும் ஆர்வமுள்ளவர் என்றார். மேலும், இருவரும் எந்தச் சூழலையும் எளிதில் கையாளும் திறன் பெற்றவர்கள் என்றும் ஜோதிடர் கணித்துள்ளார்.

