கொரோனா தடுப்பூசி போட்டதாக நடித்தராரா நயன்தாரா?... சரமாரியாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்
காதலருடன் நயன்தாரா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக வெளியிட்ட புகைப்படத்தின் உண்மைத் தன்மையை வெளியிட்டு ரசிகர்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நிலைமையைச் சீர் செய்ய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதில் முக்கியமாக கருதப்படுவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆபத்து என்று மக்கள் சிலரும் அச்சப்பட்டு ஊசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன், இது தொடர்பான புகைப்படமும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் ஊசி எங்கே என சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

