3s எனக் கூறி 24s வீடியோவை பயன்படுத்திய நயன்தாரா? உச்சக்கட்ட கடுப்பில் தனுஷ்
நயன்தாரா திருமண காணொளியில் படத்தின் காட்சிகள் 24s வைக்கப்பட்டதன் காரணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா திருமணம்
நடிகை நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த படத்தில் வரும் சில காட்சிகளையும், பாடல்கள் மற்றும் இசை உள்ளிட்டவைகளை ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு வருடங்கள் தாமதமாக்கியுள்ளார். இந்த நிலையில், தற்போது அந்த 3 செக்கன் வீடியோவிற்கு தனுஷ் தரப்பிலிருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனுஷின் உண்மையான முகத்தை வெளிகாட்டும் விதமாகவும் சமூக வலைத்தளங்களில் நயன்தாரா கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக தனுஷ் தரப்பிலிருந்து வக்கில் நோட்டிஸ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோ நீடிக்கப்பட்டது ஏன்?
இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது நயன்தாராவின் திருமணம் காணொளி நேற்றைய தினம் வெளியானது.
அதில் 3s எனக் கூறப்பட்ட பட காட்சிகள் 24s-க்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனை கவனித்த நெட்டிசன்கள் “3 நொடி வீடியோவிற்கு 10 கோடி ரூபாய் கேட்டார்கள் என்பதற்காகவே இப்படியொரு காட்சி வைக்கப்பட்டுள்ளது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இதற்கு தனுஷ் தரப்பிலிருந்து என்ன பதிலடி வரும் என பார்ப்பதற்கு ஆவலாகவும் காத்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |