சூடு பிடிக்கும் வாடகை தாய் விவகாரம்: நடிகை நயன்தாரா தலைமறைவு? உண்மை என்ன?
நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமணம் முடிந்து ஐந்து மாதங்களே ஆன நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ்சிவன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
வாடகைதாய்
இந்நிலையில் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்ததாலும் இவர்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பாரியளவில் பேசப்பட்டது. இதன்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் சில ஆதாரங்களை அதிகாரிகளிடம் சமர்பித்திருந்தனர்.
பதிவு திருமணம்
இதில் இவர்கள் ஆறு வருடங்களுக்கு முன்பே இரகசியமாக பதிவு திருமணம் செய்துக் கொண்டாகவும் வாடகை தாய்க்கான விதிமுறைகள் பின்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
மேலும் இவர்கள் இருவரும் ஹீட்டிங்கில் பிஸியாக இருப்பதாகவும் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் தலைமறைவாகிருப்பதாகவும் சமூக வலையத்தளங்களில் வைரலாகி பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.