தமிழகத்தில் சூடுபிடிக்கும் வாடகை தாய் விவகாரம்..வெளியான உண்மைகள்!
இந்தியாவில் தற்போது வாடகை தாய்மார்களை வைத்து வியாபாரம் செய்யும் விவகாரம் அதிகரித்து வருகிறது. இது போன்ற வியாபாரத்தை சதாரண பெண்களை வைத்து தான் செய்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏனெனில் சில பிரபலங்கள் குழந்தை பெறுவதை அவமானமாகவும், அழகை குறைக்கும் செயல் முறையாகவும் பார்க்கிறார்கள்.
வாடகை தாய்மார்கள்
அந்த வகையில் சூளைமேடு பகுதியில் பல வீடுகளில் வாடகை தாய்மார்களை அடைத்து வைத்து பிரசவம் பார்க்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் முன்னணி நடிகையான நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுப்படுவார்கள் என தகவல்கள்வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னை - சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்று சட்டவிரோத செயல்கள் முன்னுதாரணங்களாக இருக்க வேண்டிய சிலர் செய்யும் தேவையற்ற செயல்களாலே ஆரம்பிக்கிறது என மக்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
திடுக்கிடும் சில உண்மைகள்
குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளில் திடுக்கிடும் சில உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது குறிப்பிட்டதொரு மருத்துவமனையில் நோயாளிகளாக அனுமிக்கப்பட் நோயாளர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த வீட்டிலுள்ள பெண்கள் குஜராத், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களிலிருந்தும் வங்காளதேசம், நைஜீரியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதில் உள்ளடங்கும் பெண்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களாவர் இவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக காணப்பட்டனர் மற்றும் இதில் பலருக்கு திருமணம் ஆகவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இது போன்று காணப்பட்ட சில பெண்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து குறித்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.