எகிறும் பிசினஸ் லிஸ்ட்.. புதிய தொழிலை ஆரம்பித்த நயன்- பொங்கி வரும் சக நடிகர்கள்!
நடிகை நயன்தாரா புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருப்பதாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா
தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா.
இவர் முதல் முதலில் “ஐயா” என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் நயன்தாரா.
பின்னர் இயக்குநர் விக்னேஸ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
புதிய தொழில்
இந்த நிலையில் கோலிவுட் சினிமாவிலிருந்து பாலிவுட் சினிமாவிற்கு சென்றுள்ளார். அதிலிருந்தாலும் தன்னிடம் இருக்கும் சொத்துக்களை பன்மடங்காக்கும் முயற்சியில் இருக்கிறார்.
சமிபத்தில் அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் வாங்கிய நிலையில் தற்போது Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட் தொழிலை தொடங்கியிருக்கிறார்.
இது தொடர்பில் சமுக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட நயன், “ இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியை கொண்டாட என்னுடன் இணையுங்கள். ஒருவரையொருவர் ஆதரிப்போம் இணைந்து உயர்வோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன் முன்னதாக 9 ஸ்கின், லிப்பாம் கம்பெனி ஆகிய தொழில்களை செய்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |