சினிமாவைத் தொடர்ந்து புதிய தொழிலை தொடங்கிய நயன்தாரா: எப்போது ஆரம்பிக்கிறார் தெரியுமா?
இத்தனைக் காலமாக சினிமாவில் கலக்கி வந்த நயன்தாரா தற்போது புதிய தொழிலை தொடங்கிய சம்பவம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார். இவர் 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார்.
அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்று தற்போது அழகான குடும்பமாக வாழந்து வருகிறார்.
புதிய தொழில்
இந்நிலையில், தற்போது நயன்தாரா புதிய தொழிலை ஆரம்பித்துள்ளதாக அதிகார்வபூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது அழகிய சருமத்தை பாதுகாப்பதற்காக 9ஸ்கின் என்ற நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். இந்த நிறுவனத்தை செப்டெம்பர் 29ஆம் திகதி தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |