அறுவை சிகிச்சையில் மீண்டு வந்த தந்தையை சந்தித்த விஜய்: புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்
விஜய்க்கும் அவரின் தந்தைக்கும் பல பிரச்சினைகள் இருப்பதாக பல தகவல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகி வந்துக் கொண்டிருந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மற்றொரு புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
பல சர்ச்சையில் விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர். என்னதான் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும் எப்போதும் அமைதியாகவும் எளிமையாகவும் இருப்பவர்.
அண்மையில் கூட விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக போட்டிப் போட்டு ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. தற்போது அடுத்த திரைப்படமான லியோ திரைப்படம் தயாராகி வருகின்றது. இந்நிலையில் விஜய் குறித்து அடுத்தடுத்து பல சர்ச்சைகள் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
பெற்றோரை சந்தித்த விஜய்
இந்நிலையில் விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்து. அந்தப் புகைப்படத்தில் விஜய் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு தன் தாய் தந்தையரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது.
அண்மைக்காலமாக விஜய் குறித்து பல சர்ச்சையான விடயங்கள் பரவி வந்தது. அதில் விஜய் தன் தாய், தந்தையை கண்டுக்கொள்வதில்லை என பல செய்திகள் வந்தது இந்நிலையில் அவை அனைத்தும் பொய்யான தகவல்கள் என சொல்லும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
மேலும், சிலமாதங்களாக உடலில் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதனால் அவரையும் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |