திருப்போரூர் முருகன் கோயிலில் ரவி மோகன் - கெனிஷா சாமி தரிசனம்! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இருவரும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இருவரும் இணைந்து திருப்போரூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரவி மோகன் - கெனிஷா சர்ச்சை
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த 2024ஆம் ஆண்டு விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, ரவி மோகனுக்கும்கெனிஷாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆர்த்தி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், கெனிஷா தனக்கு மனநல ஆலோசனை வழங்கும் நெருங்கிய நண்பர் மட்டுமே என ரவி மோகன் விளக்கம் அளித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளில் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டதுடன், ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்திலும் கெனிஷா இணைந்து செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

ரவி மோகன் - கெனிஷா உறவில் மீண்டும் பரபரப்பு
கெனிஷா தன்னை விட்டு சென்றுவிட்டதாக ரவி மோகனும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், அதனை தொடர்ந்து கோவாவில் இருவரும் ஒன்றாக இணைந்து என்ஜாய் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது இருவரும் இணைந்து திருப்போரூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ரசி மோகனின் இந்த செயல் குறித்து கடுமையாக விமர்ச்சித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |