ஹீரோக்களுக்கு நிஜகராக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.! மணிரத்னம் படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?
மணி ரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் KH234 படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.
சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூலையும் குவித்துள்ளது.
இந்த நிலையில் மணி ரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் KH234 படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மட்டுமின்றி, சமந்தா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில் நயன்தாராவுடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தனது முதல் இந்தி திரைப்படமான ஜவான் படத்திற்கு நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கிய தென்னிந்திய நடிகை என்ற வரலாற்றை உருவாக்கினார் நயன்தாரா.
2016-ல் ரூ. 2 கோடி சம்பளத்தில் தற்போது ரூ.12 கோடி சம்பளம் பெறும் வரை உயர்ந்துள்ளார். இது குறித்து இன்னும் உத்தியோக பூர்வமான அறிவிப்பு எதுவும் கிட்டவில்லை என்னது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |