லியோ நாயகி த்ரிஷாவின் சொத்து விபரம்! இத்தனை கோடிகளா?
தற்போது இணையத்தில் பல பிரபலங்களில் சொத்து மதிப்பு விபரம் வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு விபரம் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
மேலும், இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். நடிகை த்ரிஷா கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். முதலில் மாடலிங் துறையில் கலக்கியவர் பின்னர் திறைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது 40 வயதை கடந்து விட்டாலும் கடந்த வருடம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வரலாற்று கதையாக கொண்டாடும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்தார்.
அதனைத்தொடர்ந்து 5ஆவது முறையாக ஜோடி சேர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கிறது.
சொத்து மதிப்பு
இந்நிலையில், த்ரிஷாவின் சொத்து விபரம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
அந்தவகையில், நடிகை த்ரிஷா கடைசியாக நடித்த லியோ திரைப்படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விளம்பரங்கள், படங்கள் என மாதம் 60 இலட்சம் ரூபாவும் வருடத்திற்கு 9 கோடி வரை சம்பாதித்து வருகிறார். மேலும், சென்னையில் இவருக்கு 6 கோடிக்கு மதிப்பிலான வீடு ஒன்றும் உள்ளது. அதேபோல ஆந்திராவிலும் ஒரு சொந்த வீடு இருக்கிறது.
த்ரிஷாவிடம் நான்கு சொகுசு கார்கள் உள்ளன. 80 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், 75 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக் மற்றும் 5 மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ரீகல் போன்ற கார்களும் இருக்கிறது.
இவ்வாறு இவரிடம் மொத்தமாக 100 கோடி வரைக்கும் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |