அன்னபூரணி படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வாயடைத்துப்போன ரசிகர்கள்
அன்னபூரணி படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வாங்கிய சம்பளம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா
திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.
சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூலையும் குவித்துள்ளது.
ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நாயகியாக நடித்தாலும் இடையிடையே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்திருக்கும் படம்தான், அன்னபூரணி.
இந்த படத்தில், சமையல் கலையில் நிபுணராக வேண்டும் என்ற ஆசையுடன் போராடும் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார்.
சம்பள விபரம்
ஆரம்பத்தில் ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பிருந்து கோடிகளுக்கு மாறினார்.
பான் இந்திய அளவில் வெளியான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க, நயன்தாரா ரூ.10 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் அன்னபூரணி படத்திற்காக வாங்கியுள்ள சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நாயகியாக நடிக்க, நயன்தாரா ரூ.11 கோடி சம்பளமாக வாங்கியதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.இவர், ஷங்கரின் 2.0 மற்றும் இந்தியன் 2 படத்தின் கதைக்குழுவில் ஒருவர்.
அன்னபூரணி, இவரது முதல் படமாகும். நயன்தாராவிற்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். சத்யராஜ், கார்த்திக் குமார், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எப்போதும் பிரச்சினையில் இருக்கிறீர்களா? செம்பு பாத்திரத்தில் இந்த ஜோதிட பரிகாரங்கள் தீர்வு கொடுக்கும்
வெளியான முதல் நாளிலேயே அன்னபூரணி படம் ரூ.80 லட்சம் வரை வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |