நயன்தாரா - விக்னேஷ் சிவன் உறவில் விரிசலா? பரவிய வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்த நயன்!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதாக கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நயன்தாரா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்ராரா - விக்கி
தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள். நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.
அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு காரணம் நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட பதிவுதான் எனவும் கூறப்படுகிறது. அந்த பதிவில் நடிகை நயன்தாரா, "அறிவு குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் மிகவும் தவறான ஒன்றாக அமையும். என் கணவர் செய்யும் முட்டாள்தனங்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.உங்களால் நான் நிறைய பிரச்சனைகளை அனுபவித்து விட்டேன். இதுக்கு மேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது" என நயன்தாரா ஒரு பதிவை வெளியிட்டு அதை நீக்கிவிட்டதாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் வேகமாக பரவி வந்தது.
இதைப் பார்த்த பலரும் உண்மையிலேயே நயன்தாரா இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார் என நம்பினார்கள், ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலியான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் என்பது பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நயன்தாரா இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தங்களை பற்றி வரும் வதந்திகளுக்கு ரியாக்ஷன் இதுதான் என விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருகின்றார். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
