குழந்தைகளுக்காக சினிமாவை விட்டு விலகுகிறாரா நயன்தாரா? உண்மை என்ன?
குழந்தைகளுக்காக சினிமாவை விட்டு நயன்தாரா விலகுவதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார்.
மேலும், சிம்பு மற்றும் நயன்தாரா முதலில் காதல் உறவில் இருந்து வந்தனர், பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவை காதலித்து வந்தார். பிறகு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமாவில் மாத்திரம் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா.
2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார்.
திரைப்படங்களில் இருந்து விலகும் நயன்
அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மற்றும் பொலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா தன் இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதற்காக, சினிமாவை விட்டு விலகவிருப்பதாக தகவல்கள் கசிந்தன.
அதாவது நடிப்பதற்கு முழுக்கு போட்டாலும், கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து நிர்வகிப்பார் என தெரிகிறது.
இந்த செய்திகள் தொடர்பான அதிகார்வபூர்வ அறிவிப்புகள் இல்லை என்றாலும் அவர் சினிமாவில் இருந்து விலகுவது அவர்களது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.