குழந்தைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!!
பிரபல நடிகை நயன்தாரா வாடகை தாய் விவகாரத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் நடிகை நயன்தாரா. மேலும் இவர்கள் சுமார் 7 வருடங்கள் காதலித்தாக தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ்சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த குழந்தைகள் வாடகை தாயின் மூலம் குழந்தை பிறந்ததாக தெரியவந்த நிலையில், மக்களிடையே பரபரப்பு எழுந்தது.
ஆதாரங்கள் கையளிப்பு
இதன் போது நயன்தாரா அதிகாரிகளிடம் ஆறு வருடங்களுக்கு முன்பே இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், வாடகை தாய்க்கான ஆதாரங்களையும் கையளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாடகைதாயின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து விசாரனைகள் முடிவில் நயன்தாரா அனைத்து சட்டவிதிமுறைகளை முறையாக பின்பற்றியதாகவும், குழந்தைகளுக்கான தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.