41 வயதிலும் செம ஹொட் லுக்கில் நடிகை நயன்தாரா! படு வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை நயன்தாரா படு கிளாமரான லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வெற்றிநடை போட்டு வருகின்றார்.
கடந்த 20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த காதல் ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில், 41 வயதிலும் குறையாத இளைமையுடன் செம ஹொட் லுக்கில் நயன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |