Mookuthi Amman 2: நயன்தாராவின் புதிய பதிவு என்னன்னு தெரியுமா? வைரலாகும் காணொளி!
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
முதல் முதலில் எடுக்கப்பட்ட காட்சியை நயன்தார தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் குறித்த காணொளி இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
மூக்குத்தி அம்மன் 2
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆன படம் மூக்குத்தி அம்மன்.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.இப்படத்தில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக உருவாக்க முடிவெடுத்த ஐசரி கணேஷ், மூக்குத்தி அம்மன் 2வை இயக்குனர் சுந்தர் சி இயக்குகின்றார்.
நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடிக்கிறார். மேலும் ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், முதல் காட்சியாக நயன்தாரா அம்மனை வணங்கும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்சியடங்கிய காணொளியை நயன்தாரா தனது சமூக வலைத்தள பக்கத்டதில் வெளியிட்டு அம்மனின் ஆசீர்வாதத்துடன் மூக்குத்தி அம்மன் 2 என பதிவிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |