நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க
தென்னிந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். குறித்த குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டியிருந்தனர்.
சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை குறித்த தம்பதிகள் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர். தற்போது நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.
நயனின் தற்போதைய சொத்து மதிப்பு
தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளாராம். ஒவ்வொரு படத்திற்கும் தனது சம்பளத்தினை அதிகரித்து வரும் இவர், சுமார் 5 முதல் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவருவதுடன், தனியார் ஜெட் விமானம் ஒன்றினையும் வைத்துள்ள பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
நயன்தாரா பிம்.எம்.டபிள்யூ 5எஸ் (BMW 5s) சீரிஸ், மெர்சிடஸ் ஜி.எல்.எஸ் 350டி (Mercedes GLS 350 D), ஃபோர்டு எண்டெவர், பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 series), இன்னோவா கிரிஸ்ட்டா என 5 கோடிகள் மதிப்புகள் சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றாராம்.
மேலும் இவருக்கு மும்பை, கேரளா, ஹைதராபாத் என இடங்களில் அபார்ட்மெண்ட் இருப்பதாகவும், சென்னையில் தனி வீடு ஒன்றினையும் வைத்துள்ளதுடன், சொந்தமாக ஸ்கின்கேர் நிறுவனம் ஒன்றினை தனது நண்பருடன் கடந்த 2021ம் ஆண்டில் தொடங்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி தேநீர் விற்பனை நிறுவனத்தின் ஒரு பகுதியையும் இவர் வாங்கியுள்ளதாகவும், விக்கியுடன் படத்தினை தயாரித்து வரும் இவர், 50 கோடி மதிப்புள்ள தயாரிப்பு நிறுவனத்தினையும் வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.