யானைக்கு பயந்து நடுங்கிய நயன்தாரா! காதலன் விக்கி செய்த காரியம்
நடிகை நயன்தாரா கோவில் யானைக்கு பயந்து பயந்து வாழைப்பழம் கொடுத்த வீடியோ இணையத்தை திணறடித்து வருகிறது.
நயன்தாரா விக்னேஷ்
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே ரிங் ரோட்டில் உள்ள மடத்தில் இவர்களின் திருமணம் நடைபெறுவதாக தெரிகிறது.
திருமண வேலைகளில் நயனும் விக்கியும் படு பிஸியாக உள்ளனர். கல்யாண வேலைகள் காரணமாகதான் நயன்தாரா ஃபிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் விழாவில் கூட பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில் நயன்தாராவும் விக்கியும் நேற்று தஞ்சாவூர் அருகே மேலவழுத்தூரில் உள்ள குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்தனர்.
விக்னேஷ் சிவனின் குல தெய்வமான ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் செய்தனர். விக்கியும் நயனும் குல தெய்வ கோவிலுக்கு வந்ததை அறிந்து ஏராளமான மக்கள் அவர்களை காண அங்கு திரண்டனர்.
இன்றைய ராசிபலன்: கிரகங்களின் கூட்டணியில் விபரீத ராஜயோகத்தை பெறும் ராசிகள்
யானைக்கு பயந்து நடுங்கிய நயன்தாரா
பின்னர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கும்பகோணம் சென்றனர். மங்கல்ய பலம் தரும் ஆதிகும்பேஸ்வரர் - மங்களாம்பிகை கோவிலில் இருவரும் வழிபாடு செய்தனர். பின்னர் பிரகாரத்தை சுற்றி வந்த அவர்கள் அங்கிருந்த கோவில் யானை மங்களத்திற்கு வாழைப்பழம் கொடுத்தனர்.
யானையின் அருகில் செல்லவே பயந்த நயன்தாரா குழந்தையை போல் பயந்து பயந்து யானைக்கு வாழைப்பழம் கொடுக்க முயற்சித்தார். ஒரு கட்டத்தில் நீயே கொடு என விக்கியிடம் வாழைப்பழத்தை கொடுத்துவிட்டு யானை மங்களத்தை பார்த்து வணங்கினார்.
விக்கியும் பயந்துபோய் யானைக்கு வாழைப்பழம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என பதிவிட்டு வருகின்றனர். டிரெடிஷ்னல் லுக்கில் சுடிதார் தலையில் கொண்டை மல்லிப்பூ நெற்றியில் பெரிய பொட்டு என வந்திருந்தார் நயன்தாரா.
கடுமையான ஆபத்தினை ஏற்படுத்தும் காளான்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
Cute @VigneshShivN and #Nayanthara in a temple at kumbakonam.
— Kanmani❤️Rambo (@kalonkarthik) May 23, 2022
Afraid to elephant like a child. ????#WikkiNayan #NayanWikkiWedding pic.twitter.com/BXNhRc7etj