இன்றைய ராசிபலன்: கிரகங்களின் கூட்டணியில் விபரீத ராஜயோகத்தை பெறும் ராசிகள்
மேஷம் :
அசுவினி: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
பரணி: குடும்பத்தினரால் செலவு அதிகரிக்கும். எதிர்பாலினர் நட்பில் எச்சரிக்கைத் தேவை.
கார்த்திகை 1: ஓய்வின்றி செயல்படுவீர்கள். இழுபறிக்கு பின்பு முயற்சி நிறைவேறும். நண்பருக்காக செலவழிப்பீர்கள்.
ரிஷபம் :
கார்த்திகை 2, 3, 4: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். செல்வாக்கு உயரும்.
ரோகிணி: இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். எதிரிகள் விலகிச் செல்வர்.
மிருகசீரிடம் 1, 2: திறமை வெளிப்படும் நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். அரசு வழியில் நன்மை கூடும். வழக்கு சாதகமாகும்.
திருவாதிரை: முயற்சி வெற்றியாகும். தொழிலில் போட்டியாளர்கள் விலகுவார்கள். புதியவர்கள் வழியே லாபம் உண்டு.
புனர்பூசம் 1, 2, 3: பிள்ளைகள் குறித்த சிந்தனை மேலோங்கும். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர்.
கடகம் :
புனர்பூசம் 1, 2, 3: செயலில் இழுபறி இருக்கும். உறவுகளால் உதவி கிடைக்கும். தொழிலில் திருப்பம் உருவாகும்.
பூசம்: புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். அரசு வழியில் உதவி உண்டு.
ஆயில்யம்: தடைகளை வெல்வீர்கள். உடல்நிலை திருப்தி தரும். வருமானம் வர ஆரம்பிக்கும். எண்ணம் நிறைவேறும்.
சிம்மம் :
மகம்: எதிரிகளால் சங்கடங்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் இழுபறியான நிலை நீடிக்கும்.
பூரம்: மனதில் பயம் வந்துபோகும். பதட்டப்படாமல் நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டு.
உத்திரம் 1: பிரச்னைகள் குறுக்கிடலாம். மற்றவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.
கன்னி :
உத்திரம் 2, 3, 4: விலகிச் சென்றவர்கள் தேடி வருவர். செல்வாக்கு உயரும். அரசு வகையில் நன்மை உண்டு.
அஸ்தம்: உங்களுடைய முயற்சி வெற்றி பெறும். ஆதாயம் காண்பீர்கள். மனதிற்கினிய சம்பவம் நடந்தேறும்.
சித்திரை 1, 2: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள்.
கடுமையான ஆபத்தினை ஏற்படுத்தும் காளான்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
துலாம்:
சித்திரை 3, 4: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரி தொல்லைகள் விலகும்.
சுவாதி: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள் விருப்பம் நிறைவறும். எதிர்ப்புகள் விலகும்.
விசாகம் 1, 2, 3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பர்.
விருச்சிகம் :
விசாகம் 4: பணவிஷயத்தில் இழுபறியை சந்திப்பீர்கள். உறவினர்களால் சங்கடத்திற்கு ஆளாகலாம்.
அனுஷம்: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வழக்கு விவகாரத்தில் இழுபறி நீடிக்கும்.
கேட்டை: பிள்ளைகளால் நன்மை அடைவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
தனுசு :
மூலம்: தேவையற்ற பயம் வந்து போகும். அரசு வழியில் கூடுதல் கவனம் தேவை. பொறுமை அவசியம்.
பூராடம்: சந்தோஷத்திற்காக பணம் செலவழிப்பீர்கள். விருப்பம் நிறைவேறும். பேச்சில் கவனம் தேவை.
உத்திராடம் 1: அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். நெருக்கமானவர்கள் தவறான வழிகாட்டலாம்.
மகரம் :
உத்திராடம் 2, 3, 4: இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். உங்களுடைய தேவைகள் நிறைவேறும் நாள்.
திருவோணம்: செயலில் இருந்த தடைகள் விலகும். அரசு வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
அவிட்டம் 1, 2: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். விஐபிகளைச் சந்திப்பீர்கள். துணிவுடன் செயல்படுவீர்கள்.
கும்பம் :
அவிட்டம் 3, 4: பேச்சில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். புதிய முதலீட்டை தவிர்க்கவும்.
சதயம்: கவனக்குறைவால் இழப்புக்கு ஆளாகலாம். நிதானம் அவசியம். யாருக்கும் ஜாமின் கொடுக்க வேண்டாம்.
பூரட்டாதி 1, 2, 3: செயல்களில் தடைகளைச் சந்திப்பீர்கள். பேச்சில் கவனமும் எச்சரிக்கையும் உங்களைப் பாதுகாக்கும்.
மீனம் :
பூரட்டாதி 4: முக்கிய செயலில் முடிவிற்கு வர முடியாமல் குழப்பமடைவீர்கள். வெளியூர் பயணம் செல்வீர்கள்.
உத்திரட்டாதி: அலுவலகத்தில் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும்.
ரேவதி: தொழிலில் நெருக்கடிக்கு ஆளாகலாம். விழிப்புடன் செயல்படுவது அவசியம். நண்பர்கள் உதவி செய்வர்.