நயன்தாரா வெளியிட்ட வார்த்தைக்கு அர்த்தம் என்ன? விக்னேஷ் வெளியிட்ட 3 நொடி காட்சி! இதற்கா 10 கோடி?
நயன்தாரா தனுஷ் இடையே பிரச்சனை வெடித்துள்ள நிலையில் விக்னேஷ் சிவன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனைக் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கிளன் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது.
இதனை இயக்கும் பணியில் கௌதம் மேனன் மேற்கொண்டுள்ள நிலையில், இவர்களின் திருமணமும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்தது.
இத்திருமணம் ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்த நிலையில், இவர்களின் திருமணம், வாழ்க்கை பயணத்தை விவரிப்பதாக இருக்கும் என்று நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
மேலும் நயன்தாராவின் பிறந்தநாளான வரும் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இதன் ப்ரொமோ காட்சி வெளியானது.
அதில் ஒரு ப்ரொமோவில் நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி இடம்பெற்றிருந்தது.
தனுஷ் கேட்கும் நஷ்டஈடு
நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் பாடலையும், காட்சியையும் தனுஷிடம் அனுமதி கேட்காமல் வீடியோவில் பயன்படுத்தியதாக கூறி, தனுஷ் 3 நொடி காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நயன்தாரா அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் தனது அறிக்கையில், ‘பிறரது துன்பத்தில் இன்பம் காணுதல்’ என்று பொருள் குறிக்கும் ‘Schadenfreude’ என்ற ஜெர்மனிய வார்த்தையை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
விக்ணேஷ் சிவனும், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனுஷ் பேசிய ‘வாழு வாழ விடு’ என்ற வீடியோவை பகிர்ந்து “இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி ரசிகர்களுக்காக நான் மனதார கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த 3 நொடி காட்சியினை பதிவிட்டு, இதற்காகத் தான் அந்த 10 கோடி என்பதை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |