நயன்தாரா கையில் அணியும் வாட்ச் எத்தனை கோடி தெரியுமா? பலருக்கும் தெரியாத நயனின் சீக்ரெட்
நடிகை நயன்தாரா அணியும் வாட்ச் ஒன்றின் விலை 1 கோடி ரூபாய் என்றும் வாட்ச் வைப்பதற்கு மட்டும் ஒரு பீரோ என்ற தகவலும் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
இயக்குனர் விக்கியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, ஹனிமூன் எல்லாம் முடிந்து தனது நடிப்பிற்கான வேலையை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தற்போது பாலிவுட் சென்ற நிலையில், அட்லியின் ஜவான் படம் என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், தற்போது நயன்தாரா குறித்த தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

கைக்கடிகாரம் இத்தனை கோடியா?
நயன்தாராவுக்கு கைக்கடிகாரங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்கிறாராம் நயன்தாரா.
வெளிநாடுகளுக்கு சென்றால் கைக்கடிகாரம் வாங்காமல் வருவது இல்லையாம். அப்படி தான் வாங்கும் கைக்கடிகாரங்களை பத்திரமாக வைக்கவே வீட்டில் தனி பீரோ வைத்திருக்கிறாராம்.
Richard Mille கைக்கடிகாரங்கள் தான் நயன்தாராவுக்கு மிகவும் பிடிக்குமாம். அவர் விரும்பி அணியும் கைக்கடிகாரத்தின் விலை ரூ. 1 கோடியே 20 லட்சம் என்று கூறப்படுகிறது.
கைக்கடிகாரங்களை சேகரிப்பதுடன் தனக்கு பிரியமானவர்களுக்கும் அவற்றையே பரிசாக கொடுத்து மகிழ்கிறாராம். பிரியமானவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதில் காசு பணம் பார்க்க மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
