விக்கியுடன் நெருக்கமாக நயன்தாரா... நிச்சயம் முடிந்துவிட்டதா? புலம்பும் ரசிகர்கள்
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்கியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
அவ்வப்போது தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தினை நயன்தாரா சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனது கைகளில் இருக்கும் மோதிரம் நன்கு தெரிய, விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா சாய்ந்து இருப்பதுபோன்ற புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு, விரலோடு உயிர் கூட கோர்த்து என்று வாசகத்தினை எழுதி வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதனை கண்ட ரசிகர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை எனவும் தகவல்கள் பரவி வருகிறது.