15 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத தந்தையின் பிறந்தநாள்! நயன்தாரா போட்ட உருக்கமான பதிவு.
நடிகை நயன்தாரா தனது தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
இந்த தம்பதிகள்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். அவ்வப்போது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர்.
பல சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்ட நயன்தாரா தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கின்றார். இந்நிலையில் நயன்தாரா தந்தையின் பிறந்தநாளுக்கு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தந்தை பிறந்தநாளுக்கு நயன்தாரா பதிவு
சிறுவயதில் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து... பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஹீரோ. என்றென்றும் என் அன்பு. ஐ லவ் யூ அச்சா என்று பதிவிட்டுள்ளார்.
இவரை அடுத்து நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டிருக்கிறார்.
2021ம் ஆண்டில் தந்தை குறித்து பேசுகையில், தனது தந்தை குறித்து பெரிதாக பேசியது இல்லை... ஏப் போர்ஸ் ஆபிஸராக வேலை செய்த அவர் தற்போது 12, 13 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் காணப்படுகின்றார். தற்போது நான் இவ்வாறு இருக்கிறேன் என்றால் அது எனது தந்தையிடமிருந்து வந்தது என்று கூறியுள்ளார்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |