38 வயதிலும் அழகு பதுமையாய் நயன்தாரா ஜொலிக்க இதுதான் ரகசியமாம்!
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒன் அன்ட் ஒன்லி நம்ம நயன்தாரா தான்.
ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தன்னுடைய திறமையால், உழைப்பால் உயர்ந்துள்ளார்.
கொள்ளை அழகு என அவருடன் நடித்த பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு அழகியாகவும் ஜொலிக்கிறார்.
இந்த வயதிலும் எப்படி.... என கேட்கும் பெண்களுக்காக அவர் பின்பற்றும் பியூட்டி டிப்ஸ்கள் இதோ,
எல்லோருக்கும் அவசியம் பயன்படும் குறிப்பு, உங்கள் உடலுக்குத் தேவையான தண்ணீர் அருந்துங்கள் என்பது தான்.
தினமும் அடிக்கடி முகத்தை சுத்தம் செய்வது, சருமத்தின் நிறத்தை பராமரிப்பது, மேலும் ஈரத்தன்மையோடு வைத்திருப்பது போன்ற விஷயங்களை தவறாமல் செய்வாராம் நயன்தாரா.
அத்துடன் அதிக பழ ஜுஸ்களை அருந்துவார். பழங்களில் உள்ள இயற்கையான சத்துக்கள் நயன்தாராவின் உடலை அழகாக பராமரிக்கிறது.
கூந்தல் அழகாக இருக்க தினமும் தன் கூந்தலுக்கு தவறாமல் எண்ணெய் பயன்படுத்தி பராமரிக்கிறாராம்.
அதேபோல் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சியை கைவிடுவதில்லை. தினமும் உடற்பயிற்சி, சரியான உணவு(டயட்) மற்றும் யோகா ஆகியவற்றை கடைபிடிக்கிறார்.
கடந்த 13 வருடங்களாக அதே அழகை பராமரித்து வருகிறார் நயன்தாரா. அதற்கு அவர் கடினமான டயட் திட்டமிடல் எல்லாம் இருப்பது கிடையாதாம். ஆனால், சரியான ஒழுங்குமுறையை கையாளுகிறாராம்.
மிக முக்கியமாக ஒருவர் நீண்ட நாட்கள் அழகாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்றால் இயற்கை முறையே சிறந்த வழியாகும்.
அதிலும் குறிப்பாக இந்த ஆயர்வேத மருத்துவம் அற்புதமான ஒன்று. நயனும் இதைத்தான் செய்து வருகிறார்.
இவர் எப்போதும் இயறக்கை சார்ந்த அழகியல் பொருட்களையே உபயோகிப்பாராம், இதுவே நயனின் அளவற்ற அழகிற்கு காரணம்.