காதலருடன் சேர்ந்து ஜோடியாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா- வைரலாகும் புகைப்படம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்த நிலையில், தமிழ்நாட்டிலும் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.
இதனால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திரைப்பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து காதலன் விக்னேஷ் சிவனும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதை இன்ஸ்டாகிராம் பக்கதிலும் வெளியிட்டுள்ளார்.