இன்று ஆரம்பமாகும் சூரியன் மற்றும் எமன் சந்திப்பு - எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?
நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி சிறப்பு வாய்ந்த ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக சில ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
சூரியன் எமன் சந்திப்பு
இன்று நவராத்திரி விழா ஆரம்பித்து தொடர்ந்து 9 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. இந்த நவராத்திரி காலத்தில் பல சிறப்பான யோகங்கள் உருவாகி மக்களுக்கு பல நன்மைகளை வழங்க உள்ளது.
அதிலும் எமன் சூரிய சந்திப்பில் உருவாகும் யோகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகின்றது. இந்த யோகத்தை நவபஞ்ச ராஜயோகம் என கூறப்படுகின்றது. இதனால் நன்மை பெறும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகம் பல நன்மைகளை வழங்க உள்ளது. இதனால் நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் முடிவிற்கு வரும்.
இந்த ராசியில் பிறந்த மாணவர்கள் கல்வித்துறையில் எந்த பாகத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் செல்வம் அதிகரிக்க நிறைய வாய்ப்பு உள்ளது.
நிங்கள் வணிகராக இருந்தால் அது உங்களுக்கு நல்ல லாபத்தை கொண்டு வரும். வியாபாரத்தில் ஈடுபடும் நபராக இருந்தால் அது சிறப்பாக நடைபெறும். மொத்தமாக மகர ராசி காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றால் மிகையாகாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் அனைத்து துறைகளிலும் நன்மையை வழங்கும்.
உங்களுக்கு இந்த யோகம் கர்ம ஸ்தானத்தில் உருவாக உள்ளது. இது தொழில், வேலை, சமூக அந்தஸ்து, நற்பெயர், அதிகாரம் ஆகியவற்றை அதிகமாக பெற்று தரும்.
எனவே தனுசு ராசிக்காரர்கள் தொழில் சார்ந்த துறைகளில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் காண்பீர்கள்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு நினைத்ததை விட நல்ல வேலை கிடைக்கும். வேலைக்கான முயற்ச்சி பாராட்டப்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
உங்கள் நிதி நிலைமை வலுவடையும். தொழில் போட்டியில் வெற்றி கிடைக்கும். வசதிகள், ஆடம்பரங்கள் அதிகரிக்கும். பொன், பொருள், நகை, வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசியின் லக்ன வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க இருக்கிறீர்கள்.
உங்களுக்கு நீங்கள் எதிாபார்த்திருந்த நல்ல செய்தி குறுகிய காலத்தில் கிடைக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். மேலதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள்.
அலுவலகத்தில் நீங்கள் முக்கிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் நிதி நிலைமை விரிவடையும்.
எதிர்பாராத பண ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன்கள் அனைத்தும் தீர்ந்து மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).