தொங்கும் தொப்பையை காணாமல் ஆக்கும் நாவல்பழ சட்னி... எப்படி செய்வது?
பொதுவாகவே காய்கறிகளையும் பழங்களையும் நாளாந்த உணவில் அதிகப்படியாக சேர்த்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அந்தவகையில் ஆப்பில், ஆரஞ்சு, மாதுளம் போன்ற பழங்களுடன் ஒப்பிடும் போது, குறைந்த விலையிலேயே அதிகளவான ஊட்சத்தத்துக்களை கொடுக்கும் பழங்களின் பட்டியவில் நிச்சயம் நாவல் பழம் முக்கிய இடத்தை பெறுகின்றது.
இது ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம் இரண்டிலும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதன் சுவை புளிப்பு-இனிப்பு மற்றும் சற்று துவர்ப்புத்தன்மை கொண்டது, மேலும் இது கோடை காலத்தில் அதிகளவில் கிடைக்கும் ஒரு பழமாகும்.
நாவல் பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் செரிந்து காணப்படுகின்றது. இது உடலுக்கு தேவையாக ஊட்டச்சத்துக்களை கொடுப்பது மட்டுமன்றி பல்வேறு நோய்களை தடுப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
குறிப்பாக நாவல் பழங்களில் இரும்புச்சத்து செரிந்து காணப்படுவதால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையைத் தடுப்பதுடன் உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியையும் மேம்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுவதுடன் இது இதயத்தை வலிமையாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. நாவல் பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும்.
உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நாவல் பழத்தில் செரிந்து காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஏ சருமத்தை நீண்ட காலத்துக்கு இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
இவ்வளவு மருத்து நன்மைகள் நிறைந்த நாவல் பழத்தை கொண்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நாவல் பழம் - 20
துருவிய தேங்காய் - ½ கப்
பச்சை மிளகாய் - 3
பொடித்த வெல்லம் - 1 மேசைக்கரண்டி
புளி - பாதி எலுமிச்சை அளவு
மிளகு - 6
சீரகத் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் நாவல் பழத்தின் விதையை நீக்கிவிட்டு சதைப் பகுதிகளை வெட்டி ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அதில் பாதி எலுமிச்சை அளவிலான புளியை எடுத்து, அதில் உள்ள நார் பகுதியை நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகு, சீரகத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக அதனுடன் வெட்டி வைத்துள்ள நாவல் பழத்தை சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் நாவல் பழ சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |