மழைக்காலத்தில் கரையான் தொல்லையா? உடனே தீர்வு தரும் மருந்து
பொதுவாக மழைக்காலம் வந்து விட்டால் வெளியில் கிடக்கும் பூச்சிகள் வீட்டிற்கு உள்ளே வர ஆரம்பித்து விடும். அப்படி ஒன்று தான் கரையான்கள்.
இவை வீட்டிலுள்ள சுவர், மர சாமான்கள், கதவுகள் உள்ளிட்ட மறைவான இடங்களில் வாழும். அந்த இடத்தை அரிந்து பாழாக்கி விடும்.
அதிலும் குறிப்பாக வழக்கத்தை விட இந்த பிரச்சனை மழை காலத்தில் அதிகமாகவே இருக்கும். ஏனெனின் மழைக்காலங்களில் ஈர்ப்பதம் அதிகமாகவே இருக்கும். இதனால் மறைந்து வாழ்வதற்காக இவை கதவுகள், ஜன்னல்கள் ஓரங்களில் இருக்கும்.
கரையான்களை அப்படி விட்டு விட்டால், அவை அதனுடைய இனத்தை பெருக்கி வீட்டில் ஒருவிதமான அசௌகரியத்தை ஏற்படுத்தி விடும். தொல்லை கொடுக்கும் கரையான்களை மணியளவும் செலவு இல்லாமல் எப்படி அழிக்கலாம் என பலரும் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில், வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி கரையான்களை விரட்டியடிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. எலுமிச்சை சாறு மற்றும் வினிகர்
2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் இரண்டையும் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி, கரையான் உள்ள இடத்தில் நேரடியாக தெளிக்கவும். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் மற்றும் எலுமிச்சை சாறு சிட்ரிக் அமிலம் இரண்டும் கரையான்களை அந்த இடத்திலேயே கொன்று விடும்.
2. உப்பு நீர்
சூடான நீரில் உப்பு கலந்து கரையான்கள் அதிகமாக வந்து போகும் இடத்தில் தெளிக்கவும். இப்படி செய்தால் கரையான்கள் அழிந்து விடும்.
3. கிராம்பு எண்ணெய்
அரை கப் தண்ணீரில் மூன்று சொட்டு கிராம்பு எண்ணெய் போட்டு கலந்து கரையான்கள் இருக்கும் இடத்தில் தெளிக்கவும். கிராம்பில் இருக்கும் கடுமையான வாசனை கரையானை கொன்று விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |