300 இருக்கும் சர்க்கரை அளவை, 90க்கு கொண்டு வர வேண்டுமா? வெறும் 100 ரூபாய் செலவு செய்தாலே போதும்
தற்போது உலகில் சர்க்கரை வியாதியில் அவதிப்படுவர்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றனர்.
நீரிழிவுக்கு என்ன காரணம்?
நாம் சாப்பிடும்போது, நமது உடல் கார்போஹைட்ரேட்டுகளை சர்க்கரையாக (குளுக்கோஸ்) உடைக்கிறது. கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன், பின்னர் ஆற்றலுக்காக அந்த சர்க்கரைகளை உறிஞ்சுவதற்கு நமது உடல் செல்களை அறிவுறுத்துகிறது.
இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் அல்லது சரியாக வேலை செய்யாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது, இதனால் நமது இரத்தத்தில் சர்க்கரை சேருகிறது.
நீரிழிவு நோயின் வகைகள் என்ன?
'டைப் 1' நீரிழிவு நோயில், கணையம் இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது, எனவே குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் குவிகிறது.
இது ஏன் நிகழ்கிறது என்று விஞ்ஞானிகளுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் இது மரபணு ரீதியிலான தாக்கத்தை கொண்டிருக்கலாம் அல்லது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்தும் வைரஸ் தொற்றுகளின் விளைவாக இருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10 சதவீதம் பேருக்கு டைப் 1 பாதிப்பு உள்ளது.
டைப் 2 நீரிழிவு நோயில், கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாது, அல்லது ஹார்மோன் திறம்பட செயல்படாது.
இது பொதுவாக நடுத்தர வயது மற்றும் முதியவர்கள், அதிக எடை மற்றும் உட்கார்ந்த நிலையில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் சில குறிப்பிட்ட இனங்களைச் சேர்ந்த தனிநபர்கள், குறிப்பாக தெற்காசியர்கள், ஆகியோருக்கு நிகழ்கிறது.
நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்ன?
- மிகவும் தாகமாக உணர்வது.
- வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல்
- குறிப்பாக இரவு நேரங்களில்.
- மிகவும் சோர்வாக உணர்வது.
- முயற்சி செய்யாமல் உடல் எடையை குறைதல்.
- வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல்
- மங்கலான பார்வை.
- குணமடையாத வெட்டு காயங்கள் மற்றும் ரத்த காயங்கள்
கட்டுக்குள் அடங்காமல் 300 இருக்கும் சர்க்கரை அளவை, 90-க்கு கொண்டுவர, வெறும் நூறு ரூபாய் செலவில் இந்த பொருட்களை வாங்கி உணவில் சேருங்கள்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
- கீரைகள்
- சூப் வகைகள்
- எலுமிச்சை
- வெங்காயம்
- புதினா
- வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்
- நட்ஸ்
- நறுமணமூட்டிகள் (Spices)
தவிர்க்கவேண்டிய உணவுகள்
- தேன்
- சர்க்கரை
- ஸ்வீட்ஸ்
- டிரை ஃப்ரூட்ஸ்
- குளூகோஸ்
- சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்
- கேக், பேஸ்ட்ரீஸ்
- பொரித்த உணவுகள்
- இனிப்பான குளிர் பானங்கள்
- மது
- ஜூஸ் வகைகள்
வேம்பு
சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேப்பிலை இலைகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.
பாகற்காய்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் இந்த செடியில் உள்ளது. பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.
கருப்பு சீரகம்
கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.
நாவல் பழ விதை
நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது.