பால் போன்ற வெள்ளை முடியை கருப்பாக்கணுமா? இந்த இரண்டு பொருளை விடாம பூசுங்க
முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளில் ஒன்று நரை முடி. இளம் வயதிலேயே நரை ஏற்படுவதால் பலர் ரசாயன டைகள் போன்ற பொருட்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இயற்கை முறையில் பாதுகாப்பாக நரை முடியை கருப்பாக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பல தொலைக்காட்சி
நடிகைகளுக்குப் மேக்கப்பாக பணியாற்றிய அனுபவமுள்ள வசுந்தரா, நரை முடிக்கு ஓர் அழகான இயற்கை தீர்வை தற்போது பகிர்ந்துள்ளார். இதற்கான முக்கியமான மூலிகைகள் மற்றும் இயற்கைப் பொருட்கள் வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கக்கூடியவை என்பதும் சிறப்பு.
நரை முடியை கருப்பாககும் வீட்டில் செய்யும் ஹேர் டை
100 கிராம் மருதாணி பவுடருடன், செம்பருத்தி பூ பவுடர் ஒரு ஸ்பூன், காய வைத்து அரைத்த நெல்லிக்காய் பவுடர் ஒரு ஸ்பூன், கரிசலாங்கண்ணி பவுடர் ஒரு ஸ்பூன், எலுமிச்சை தோல் பவுடர் ஒரு ஸ்பூன், முருங்கை எண்ணெய் ஒரு ஸ்பூன், யூகலிப்டஸ் எண்ணெய் நான்கு சொட்டு,
அரை எலுமிச்சை பழ சாறு, தயிர் மூன்று ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியான பதத்திற்கு மாற்ற வேண்டும். இக் கலவை தடவும்போது, அது தலைமுடியில் ஒட்டும் வகையில் இருக்க வேண்டும்; கீழே கொட்டக்கூடாது. தடவிய பிறகு, 10 மணி நேரம் தலை மீது வைத்திருக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை
தலையில் எண்ணெய் தேய்த்த பிறகு, அரை மணி நேரத்துக்குப் பின் கிளவுஸ் போட்டு, முடியை பிரித்து நன்கு தடவ வேண்டும். வெள்ளை முடி இல்லாதவர்கள் ஒரு மணி நேரம் வைத்தால் போதும்.
ஆனால் நரை முடியுள்ளவர்கள் 3 முதல் 4 மணி நேரம் வரை இந்தக் கலவையை தலையில் ஊற விட வேண்டும். பின்னர் மிகக் குறைவான ஷாம்பூவுடன் முடியை சுத்தம் செய்யலாம். தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால், சில நாட்களில் நல்ல மாற்றத்தை காண முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |