Body care tips: அக்குள் நாற்றத்தை வெளியில் வரவிடாமல் தடுக்கும் பொருட்கள்
பொதுவாக நம்மிள் சிலருக்கு வெளியிடங்களுக்கு சென்றால் அங்குள்ள அதிகமான உஷ்ணத்தினால் வியர்வை மணம் வெளியில் வரும்.
இது வழக்கமாக அனைவருக்கும் இருக்கும். மாறாக இன்னும் சிலருக்கு அளவு அதிகமாக இருக்கும். இதனால் அவர்களின் துணைக் கூட பக்கத்தில் வருவதற்கு ஒரு நிமிடம் யோசிப்பார்கள்.
இப்படியான சூழ்நிலையை நிச்சயம் ஒவ்வொருவருமே வாழ்நாளில் நடந்திருக்கும். ஒருவரது உடலில் வீசும் துர்நாற்றமானது அந்நபருக்கு மட்டுமல்லாமல் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும்.
அக்குள் துர்நாற்றம் வரும் பிரச்சினையுள்ளவர்கள் முதலில் தங்களை புத்துணர்ச்சியாகவும், நல்ல மணத்துடனும் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அதற்காக கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்திவதிலும் பார்க்க, வீட்டிலுள்ள ஒரு சில பொருட்களை கொண்டு இதனை சரிச் செய்யலாம்.
அந்த வகையில் வீட்டில் உள்ள இயற்கை பொருட்களை கொண்டு எப்படி அக்குள் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அக்குள் துர்நாற்றத்தை இல்லாமலாக்கும் பொருட்கள்
1. பேக்கிங் சோடா அக்குளில் வீசும் துர்நாற்றாத்தை இல்லாமல் செய்கிறது. பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து, கழுவினால் அக்குளில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கி, துர்நாற்றம் வருவது குறைவாக இருக்கும்.
2. அக்குள் நாற்றம் அதிகமாக இருப்பவர்கள், எலுமிச்சை சாற்றுடன் சிறிது நீர் கலந்து, அதை அக்குளில் தடவ வேண்டும். இப்படி செய்தால் எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை, அக்குளில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
3. எலுமிச்சையைப் போன்று தக்காளியும் உடல் துர்நாற்றத்தை எதிர்த்து போடுகிறது. ஏனெனின் தக்காளியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. தினமும் அக்குளில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் அக்குள் துர்நாற்றம் இல்லாமல் போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |