இரவில் தூங்குவதற்கு முன் எண்ணெய் தடவினால் என்ன பலன்? மருத்துவர் கொடுத்த டிப்ஸ்
அதிகமாக தொலைபேசி மற்றும் கணினி பார்ப்பவர்களுக்கு இரவில் கண்களில் அரிப்பு, சிவத்தல், எரிச்சல் அல்லது நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படும். இதற்கு என்ன தீர்வு என தெரியாமல் சிலர் கண்ணாடி அணிவார்கள்.
அப்படி இல்லாமல் வீடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் வைத்தியம் செய்யலாம். இதற்கு மருத்துவர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இரவில் கடுமையான வேதனை கொடுக்கும் கண்களுக்கு சொட்டு மருந்துகளை போட்டு தற்காலிக நிவாரணம் கொடுப்பது பலனற்றது.
இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்வதே நிரந்தர தீர்வாக இருக்கும்.
அந்த வகையில், கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில எளிய குறிப்புக்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
கண் கழுவுதல்
தினமும் குறைந்தது இரண்டு முறை கண்களை கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவும். கண்களில் உள்ள தூசு மற்றும் அசுத்தங்கள் கண்ணில் எரிச்சல் அல்லது அரிப்பை ஏற்படுத்தலாம்.
ஆரோக்கியமான உணவு பழக்கங்கள்
தினமும் சாப்பிடும் உணவில் கீரைகள், மீன் மற்றும் கேரட் ஜூஸ் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பழக்கம் கண்களுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்கும். புத்துணர்ச்சியூட்டும் பழச்சாறுகள் குடிப்பது உடலின் நீர்ச்சத்தை பராமரித்து கண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.
இயற்கை வைத்தியங்கள்
1. குளிர்ச்சியான வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு துண்டுகளை வெட்டி கண்களுக்கு மேல் சுமார் 10-15 நிமிடங்கள் வைத்துக் கொள்ளவும். இப்படி செய்தால் கண்களில் இருக்கும் வீக்கம், சோர்வு குறையும்.
2. பன்னீரில் நனைத்த பஞ்சை கண்களுக்கு மேல் வைத்து கொண்டால் கண்களுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் கிடைக்கும்.
3. இரவு தூங்குவதற்கு முன்னர் பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஆகிய எண்ணெய்களில் ஏதாவது ஒன்றை கண்களுக்கு மேல் தடவி மசாஜ் செய்யவும். இப்படி செய்தால் கண்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக கிடைத்து சோர்வு குறையும்.
4. தினமும் 10 நிமிடங்கள் கண்களுக்கு பயிற்சி கொடுப்பது அவசியம். கண்களை வலது, இடது, மேல், கீழ் மற்றும் கடிகார திசையிலும், எதிர் திசையிலும் மெதுவாக நகர்த்த வேண்டும். இந்த பயிற்சி கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
