முடி ரொம்ப அடர்த்தியா வளரணுமா? கண்டதையும் தேய்க்காம இந்த ஒரு பொருள மட்டும் போடுங்க!
முடி வளர்ச்சிக்கு கிராம்பு பெரிதும் உதவக்கூடும்.
இதை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது, என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிராம்புகளில் அதிக அளவு ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இது உங்கள் தலைமுடியின் வளர்ச்சியையும் வலிமையையும் சேர்க்கின்றன. கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு முகவர்கள் உள்ளது. இது முடி தடிமனாக செய்வதோடு முடி உதிர்வை குறைக்க உதவுகிறது.
கிராம்புகளில் வைட்டமின் கே இருப்பதால் இது முடி வளர்ச்சியை தூண்டும். உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.
பொடுகுக்கு சிகிச்சையளிக்கவும் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக அரிப்புகளையும் நீக்குகிறது.

கிராம்பை எப்படி பயன்படுத்துவது?
கிராம்புகளை முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முறை குறித்து பார்க்கலாம்.
- தேவை கிராம்பு - 10
- தண்ணீர் - 2 கப்
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
10 கிராம்புகளை இலேசாக குழைத்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
நீர் கொதிக்கும் போது கறிவேப்பிலையை சேர்க்கவும். கொதித்ததும் இறக்கி குளிர விடவும்.

இந்த நீரை மொத்தமாக காய்ச்சி ஃப்ரிட்ஜ்ஜில் குளிர வைக்கலாம். தலைக்குளியலுக்கு பிறகு இந்த நீரை கொண்டு கூந்தலை மென்மையாக படிப்படியாக அலசி விடவும்.
கிராம்பு பூஞ்சை காளான் கொண்டுள்ளது. இது பொடுகு மற்றும் அதனுடன் தொடர்புடைய அரிப்பு அனைத்தையும் நீக்கும் தன்மை கொண்டது.
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடண்ட்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி இறந்த மயிர்க்கால்களை வெளியேற்றுகிறது. இந்த இலைகளில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் புரதச்சத்து உள்ளது. இது முடி உதிர்தலை தடுக்க செய்கிறது.