முடி கரு கருனு அடர்த்தியா வளர கண்டதையும் தேய்க்காம இந்த ஒரே ஒரு பொருளை போடுங்க... இனி 2 மடங்காக அதிகரிக்கும்!
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்துங்கள்.
இது குறித்து விரிவான பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். வெங்காயத்தின் சாறு அதில் நன்கு இறங்கியதும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அலசினால் முடி அடர்த்தியாக வளரும்.
வெங்காயத்தில் உள்ள சல்பர் முடியின் வேருக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியைத் தூண்டும். பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டுமே பயன்படுத்தலாம். இரண்டிலும் ஒரே ஊட்டச்சத்து தான் இருக்கிறது.
ஆனால் சின்ன வெங்காயத்தில் சல்பரின் அளவு அதிகம். அதனால் சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்துவது இன்னும் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.
முக்கிய குறிப்பு
- முடி வளர்ச்சி அதிகரிக்க தலைமுடியின் வேர்க்கால்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
- அதனால் தேங்காய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளியுங்கள்.
- மாதம் 2 முறை இதை செய்து வர முடி வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும்.
- வெதுவெதுப்பான எண்ணெயைத் தலையில் தேய்ப்பதால் முடியின் வேர்க்கால்கள் பலம் பெறும். ஊட்டச்சத்துக்களை முடிக்குக் கொடுத்து முடியின் வளர்ச்சியைத் தூண்ட ஆயில் மசாஜ் உதவுகிறது.
- ஏனெனில் ஆயில் மசாஜ் செய்யும்போது தலைமுடியின் சருமத் துளைகள் திறந்து கொள்ளும்.
- அதில் எண்ணெய் இறங்குவதால் தலைமுடிக்குப் போதிய நீர்ச்சத்தும் ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.