தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் ரோஸ்மேரி : இனிமேல் வீட்டிலேயே வளர்க்கலாம் வாங்க
ரோஸ்மேரி ஒரு அருமையான வாசனையுடன் கூடிய பயனுள்ள மூலிகை. இது சமையலில் ருசியை கூட்டுவதுடன், வாசனைக்கும், ஆரோக்கியத்துக்கும் பயன்படும்.
ரோஸ்மேரி செடியை வளர்க்கத் தோட்டம் வேண்டுமென்று அவசியமில்லை வீட்டில் ஒரு சிறிய பாட்டிலில் கூட இத்தாவரத்தை எளிதாக வளர்க்கலாம்.
உங்கள் வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி ரோஸ்மேரி தோட்டத்தை உருவாக்க ஆசையா? அப்படியெனில், இதோ சில சிம்பிளான பராமரிப்பு டிப்ஸ் இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் ரோஸ்மேரி செடியை எளிதாக வளர்க்க டிப்ஸ்
1. சரியான கட்டிங்கை தேர்வு செய்யவும்: ஒரு ஆரோக்கியமான ரோஸ்மேரி செடியிலிருந்து 4–6 இன்ச் நீளமுள்ள இளம் தண்டைப் பகுதியை கிளிப்பிங் பண்ணுங்கள்.
இதற்கு அதிக மரத்தன்மை இல்லாத, மென்மையான புதிதாக வளர்ந்த பகுதி சிறந்தது. கட்டிங்கின் அடிப்பகுதியில் உள்ள 1 இன்ச் அளவுக்கான இலைகளை நீக்கவும், ஏனெனில் இவை தண்ணீரில் நனைய அதிக வாய்ப்பு உள்ளது.
2. பாட்டிலில் வைக்கவும்: ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டில் எடுக்கவும். அதில் சாதாரண tap water ஊற்றவும். கட்டிங்கின் இலைகள் இல்லாத பகுதி மட்டும் தண்ணிக்குள் மூழ்கி இருக்க வேண்டும், ரொம்ப ஆழமாக வைக்க வேண்டாம்.
3. சூரிய ஒளி தேவையான அளவு பெறச் செய்யவும்: பாட்டிலை வெயில் படும் இடத்தில், உதாரணமாக ஜன்னலருகில் அல்லது பால்கனியில் வைக்கவும். நாளொன்றுக்கு குறைந்தது 6–8 மணி நேரம் நேரடி அல்லது பிரகாசமான ஒளி கிடைக்க வேண்டும்.
4. தண்ணீரை மாற்றுவது முக்கியம்: தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாட்டிலில் உள்ள தண்ணியை மாற்ற வேண்டும். சுத்தமான தண்ணி மட்டும் பயன்படுத்தவும், இல்லையெனில் வேர்கள் அழுகும் வாய்ப்பு உள்ளது. புது தண்ணி மூலமாக, வேர்கள் வளர தேவைப்படும் ஆக்சிஜனும் கிடைக்கும்.
5. வேர்கள் தோன்றும் கட்டம்: 2–3 வாரங்களில் கட்டிங்கில் வெள்ளை நிற சின்ன வேர்கள் தோன்றும். வேர்கள் சுமார் 1 இன்ச் வரை வளர்ந்ததும், மண்ணில் நட்டுவிட தயாராகி விடும்.
6. மண்ணில் மாற்றுவது எப்படி? ஒரு சிறிய தொட்டியில் நன்கு வடிகால் வசதி உள்ள மணல் கலந்த மண்ணை எடுத்து வைத்துக்கொள்ளவும். கட்டிங்கை மெதுவாக மண்ணில் நட்டு, சுத்தியுள்ள மண்ணை லேசாக அழுத்தி நிலைநிறுத்தவும். பிறகு, கொஞ்சம் தண்ணி ஊற்றவும்.
இவ்வாறு பராமரித்தால், உங்கள் வீட்டிலேயே ஒரு அழகான, மணமமிக்க ரோஸ்மேரி செடி வளரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |