ஆரோக்கியமான நத்தை வறுவல்...செய்து பாருங்களேன்
நாம் நத்தைகளைக் கண்டாலே ஏதோ காணாததைக் கண்டதைப் போல் அருவருப்பாக பார்ப்போம். ஆனால், அதே நத்தையை கிராமப் புறங்களில் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் ஆரோக்கியமானது.
இனி நத்தைக் வறுவல் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - spot beat news
தேவையான பொருட்கள்
நத்தை - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
தக்காளி - 1
மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
image - manithan.com
செய்முறை
முதலாவதாக வயல்களில் கிடைக்கும் நத்தைகளை பிடித்து கொஞ்சநேரம் கொதித்த நீரில் போட்டு வைத்தால் நத்தைகள் இறந்துவிடும். பின்னர் அதன் ஓடுகளை நீக்கி, நத்தையின் கறியை பிரித்தெடுத்து தண்ணீரில் மூன்று முறை அலசிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
அதன் பச்சை வாசம் போனதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் மிளகாய் தூள், மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் நத்தை கறியை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். நத்தைக் கறிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
பின்னர் அதில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
கறி வெந்ததும் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தண்ணீர் வற்றியவுடன் இறுதியாக கொத்தமல்லித் தூவி இறக்கவும்.