காலில் அறுவை சிகிச்சை... நடராஜன் வெளியிட்ட புகைப்படம்! பிரபலங்கள் கொடுத்த டுவிட்
ஐபிஎல் தொடரில் காயம் அடைந்த தமிழக வீரர் நடராஜனுக்கு காலில் அறுவைசிகிச்சை செய்துள்ள நிலையில், அவரது உடல்நிலை சரியாக ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் டுவிட் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் 14ஆவது சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த நடராஜன், திடீரென்று ஏப்ரல் 22ஆம் தேதி தொடரிலிருந்து விலகினார்.
அவருக்கு முழங்கால் பகுதியில் வலி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டி உள்ளது. இதனால்தான் தொடரிலிருந்து விலகினார் என ஹைதராபாத் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்தது.
Speedy recovery brother , seekram seri aydum https://t.co/X9GY4oLZqo
— DD Neelakandan (@DhivyaDharshini) April 27, 2021
இந்நிலையில் தற்போது ட்வீட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நடராஜன், “இன்று எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்திய பிசிசிஐக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நடராஜன் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிரபலங்கள் ரசிகர்கள் என தங்களது டுவிட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.