தனது செல்ல மகளின் படத்தை வெளியிட்ட நடராஜன்! குவியும் லைக்ஸ்கள்
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஒரு கலக்கு கலக்கி இருந்தார்.
இதனையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற நடராஜன் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி காயம் காரணமாக வெளியேறினார்.
அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நடராஜன் மனைவியுடன் சேர்ந்து மகள் ஹன்விகாவின் 6 மாத கால பிறந்த நாளை புகைப்படத்துடன் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், ஹன்விகா எங்கள் சின்ன தேவதை, அவள் பிறந்த போது நான் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவில் இருந்தேன்.
இன்றோடு அவளுக்கு 6 மாதம் காலம் ஆகிறது. வாழ்க்கை கணிக்க முடியாது. இந்த தருணம் கணிக்க முடியாதது. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது விலைமதிப்பற்றது. என பதிவிட்டுள்ளார்.
Hanvika - our little angel...when she was born against all my plans, I was unexpectedly far away in Australia...today she turns 6 months old and against all my plans, I am unexpectedly with her! #life is unpredictable, these #moments are precious, #familytime is priceless. pic.twitter.com/Ffuhco8oys
— Natarajan (@Natarajan_91) May 7, 2021