உலகமே கண்டிராத பிரபஞ்சத்தின் அற்புத புகைப்படத்தை வெளியிட்ட நாசா - அறிவியல் அதிசயம்
உலகமே கண்டிராத புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை காட்டு விதமாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
நட்சத்திர துகள்களால் நிறைந்து காணப்படும் இப்புகைப்படம் பிரபஞ்சம் குறித்து இதுவரை கிடைத்துள்ள புகைப்படங்களிலேயே மிகவும் ஆழமானது என்பதாகும்.
உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விண்வெளியில் செலுத்தியது.
இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தைதான் நாசா வெளியிட்டுள்ளது. மேலும், நாசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் ஏராளமான நட்சத்திர திரள்கள் காணப்படுகின்றன.
புகைப்படத்தின் முன்பகுதியில் மாபெரும் நட்சத்திர திரள்களும், பின்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர திரள்களும் பிரகாசமாக ஒளிர்கின்றன.
கரீனா நிபுலாவின் என்.ஜி.சி. 3324 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் இருந்தே நட்சத்திரங்கள் உருவாகலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.