நான் மாடு தான் மேய்ப்பேன்.. அடம்பிடித்த மகனுக்கு சாமர்த்தியமாக அம்மா பார்த்த வேலை
“நான் மாடு தான் மேய்ப்பேன்..” என அடம்பிடித்த மகனுக்காக அம்மா பார்த்த வேலை காணொளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சாமார்த்தியமாக அம்மா பார்த்த வேலை
பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகள் வீட்டிலுள்ளவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்களோ அதை கேட்டு தான் வளர்வார்கள்.
அப்படி ஒரு சிறுவன் பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில்சிறுவன் ஒருவன், “ பாடசாலைக்கு செல்லமாட்டேன். நான் மாடு மேய்ப்பதற்காக செல்கிறேன்.
அந்த வேலை கஷ்டம் என அம்மா கூறினாலும் பரவாயில்லை நான் மாடு மேய்ப்பேன்..” என அடம்பிடிக்கிறார். சிறுவனை எப்படி சமாளிப்பது என யோசித்த அம்மா, “மாடுகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக சரி நீ பாடசாலைக்கு செல்..” எனக் கூறி தந்தையுடன் அனுப்பி வைக்கிறார்.
சிறுவர்களுக்கு பாடசாலை செல்வது சென்றாலே ஒருவித பயம் தான். ஆனால் சிறுவனை அடிக்காமல் அவனை தண்டிக்காமல் சாமர்த்தியமாக பாடசாலைக்கு அனுப்பிய காட்சி இணையவாசிகள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இந்த காணொளியை பார்த்த பல தாய்மார்கள், குறித்த அம்மாவுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |