ஆகஸ்ட் 12ஆம் தேதி அரிய முழு சூரிய கிரகணம்.., நாசா நேரலை ஏற்பாடு
ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழவுள்ள அரிய முழு சூரிய கிரகண நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள மக்கள் காண நாசா நேரலையாக ஒளிபரப்ப உள்ளது.
முழு சூரிய கிரகணம்
ஆகஸ்ட் 12ஆம் தேதி வட அரைக்கோளத்தின் பல பகுதிகளில் அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் வட பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணம் தெரியும்.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், கனடா, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவில் பகுதி சூரிய கிரகணம் காணப்படும்.

ஐஸ்லாந்தின் மேற்கு பகுதியில் சூரியன் முழுமையாக மறையும் நிகழ்வு 2 நிமிடங்கள் 18 விநாடிகள் வரை நீடிக்கும்.
பகுதி கிரகணம் தொடங்குவது முதல் முடிவது வரை மொத்த நிகழ்வு சுமார் 4 மணி 23 நிமிடங்கள் நடைபெறும்.
நாசா நேரலை ஏற்பாடு
கிரகணத்தின் போது சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவை ஆய்வு செய்ய நாசா விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
WB-57 ஆராய்ச்சி ஜெட் விமானங்கள் நிலவின் நிழலைப் பின்தொடர்ந்து பறந்து கொரோனாவின் புகைப்படங்கள் மற்றும் அறிவியல் தரவுகளை சேகரிக்கும்.
மேலும், ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினில் அறிவியல் பலூன்கள் செலுத்தப்பட்டு, பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வு செய்யப்படும்.
மேலும், சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, ISO 12312-2 சான்றிதழ் பெற்ற சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நாசா அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இந்த கிரகணத்தை நேரடியாக காண முடியாது என்பதால் நாசாவின் நேரலை மூலம் இந்த அரிய நிகழ்வை பார்க்கலாம்.