நெப்போலியன் மகன் பிறந்தநாள் - தன் கணவர் மேல் அக்ஷயாவிற்கு எவ்வளவு காதல் பாருங்க
தன் கணவர் பிறந்தநாளில் அக்ஷயா காட்டிய பாச காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த குடும்பத்தினர் சந்தோஷத்தில் திழைத்தனர்.
நெப்போலியனின் மகன் தனுஷின் பிறந்தநாள் விழா
சினிமா மற்றும் அரசியல் உலகில் தனக்கென ஒரு பெயரைப் பதித்த நெப்போலியன், தற்போது குடும்ப வாழ்க்கையில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது மூத்த மகன் தனுஷ், கடந்த வருடம் அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் இந்நிலையில், ஜூலை 27 அன்று தனுஷ் தனது 27வது பிறந்த நாளை குடும்பத்துடன் சிறப்பாகக் கொண்டாடினார்.
தனுஷுக்கு தசை சிதைவு நோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நெப்போலியன் தனது அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையையெல்லாம் விட்டுவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
மகனுக்காக அனைத்தையும் புறக்கணித்தவர், அவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முழு நேரமும் செலவழித்துள்ளார்.
தனுஷின் உடல்நிலை பற்றிய அனைத்து விபரங்களையும் முன்பே விளக்கிய பிறகும், அக்ஷயா சம்மதம் தெரிவித்து, கடந்த ஆண்டு ஜப்பானில், இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது 2025 ஜூலை 27 அன்று, தனுஷின் 27வது பிறந்த நாள் அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. இதில் கேக் வெட்டும் நிகழ்வில் மனைவி அக்ஷயா, நெப்போலியன் மற்றும் அவரது மனைவி, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் கலந்துகொண்டனர்.
விழாவில், அக்ஷயா தனது கணவருக்கு கேக்கை அன்போடு ஊட்டும் தருணம், உறவினர்கள் மனதைக் கவர்ந்தது. இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |