50 வயதான காதலர் தினம் பட நாயகி! இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?
காதலர் தினம் திரைபடத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரேவை நினைவிருக்கா?
புற்றுநோயிலிருந்து மீண்டு 50 வயதை தொட்டுள்ள இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சோனாலி பிந்த்ரே
1994-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘Aag’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சோனாலி தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார்.
அதனை தொடர்ந்து இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் ‘க்ளாசிக்’ என கொண்டாடப்படுகிறது.
சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே இயக்குநர் கோல்டி பெஹ்ல் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.இந்த தம்பதிக்கு 2005ஆம் ஆண்டு மகன் பிறந்தார்.
திருமணத்தின் பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சோனாலி பிந்த்ரே கடந்த 2018ஆம் ஆண்டு தனக்கு புற்றுநோய் இருப்பதாக அறிவித்தார்.
அதன் பின்னர் நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், 4-வது ஸ்டேஜ் புற்றுநோயிலிருந்து கடந்த 2021 ஆண்டு வெற்றிகரமாக மீண்டு வந்தார்.
அதன் பின்னர் தழிழ் திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்து வரும் சோனாலி பிந்த்ரே சமூக ஊடகங்களில் ஆக்டிவ் ஆக இருக்கின்றார்.
இந்நிலையில் 50 வயதிலும் இளமையும் அழகும் குறையாமல் இருக்கும் சோனாலி பிந்த்ரேவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |